,

கோவை பாராளுமன்ற தொகுதி மக்கள் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்க வேண்டும் – செல்வகுமார் பட்டியல்

மோடி
Spread the love

கோவை பாராளுமன்ற  உறுப்பினர் யார் ? அவர் பெயர் என்ன ? என்று கோவை மக்களிடம் கேட்டால் அப்படி ஒருவர் உள்ளாரா? என்று கேட்கும் லட்சணத்தில் தான் ஐந்து வருடங்களாக மக்கள் பணியாற்றி உள்ளார் கோவை கம்யூனிஸ்ட் பாராளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்.
கோவை பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செய்யப்பட்ட மக்கள் பணிகள் என்னென்ன என்று கோவை பாராளுமன்ற கம்யூனிஸ்ட் எம்பியால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? கோவை மக்கள் தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட் எம்பியை பார்த்தோம்.அதன்பின் அவரை பார்த்ததே இல்லை இதுவரை என்கின்றனர்.
கோவை  கம்யூனிஸ்ட் பாராளுமன்ற  உறுப்பினர் தொழில்முனைவோருக்கு கூட  எதுவும் செய்ய வேண்டாம், தொழிலாளர்களுக்கு ஏதேனும் செய்யலாமே? அதுவும் இல்லை.
பண மோசடி, ஊழல் குற்றவாளி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி போல் பண வசூல் பேய்களிடம் இருந்து கோவை மாவட்ட பொதுமக்களையும், தொழில் நிறுவனங்களையும் காப்பதற்கு நரேந்திர மோடி அவர்களின் பிரதிநிதி கோவை பாராளுமன்ற  தொகுதிக்கு வேண்டும்.
46 பொதுமக்களை கொன்ற, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்  ஊனமாக,படுகாயமடைய காரணமாக இருந்த கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை திமுக அரசு கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்துள்ளது, இதனால் எற்படும் ஆபத்துகளை தடுக்க நரேந்திர மோடி அவர்களின் பிரதிநிதி கோவைக்கு வேண்டும்.
தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தும், வளர்த்தெடுக்கும் திமுகவின் கொள்கைகளுக்கு முட்டுக்கட்டை போட நரேந்திர மோடி அவர்களின் பிரதிநிதி வேண்டும்.
மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் பிரதிநிதி கோவை மாவட்ட மக்களுக்கு இருந்தால் தான் கோவை மற்றும் கொங்கு பகுதிகளுக்கு அதிகமாக முதலீடுகளை ஈர்க்க முடியும் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி மேம்படுத்த முடியும்.கோவை மக்கள் நரேந்திர மோடி அவர்களுக்கு 2014,2019 ல் பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்காமலே கோவையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது.கோவை To சென்னை, கோவை To பெங்களூரு “வந்தே பாரத்” இரயில் என பல திட்டங்களை கொடுத்தது.எனவே 2024-ல் கோவை மக்கள் நரேந்திர மோடி அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரை கொடுத்தால் அவர் கண்டிப்பாக மத்திய அமைச்சர் ஆவதற்கு 100% வாய்ப்புகள் உள்ளது.
கோவை பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சராக இருக்கும் போது கோவை மக்கள் எத்தனை பெரிய பெரிய பலன்களை அடைய முடியும் என்பதை நினைத்து பாருங்கள்!  இதற்காகவே கோவை மக்கள் நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை கொடுக்க வேண்டும்.
2019-ல் வெற்றி பெற்ற கோவை பாராளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் இதுவரை கோவை மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு,தொழில் நிறுவனங்களுக்கு செய்த நன்மை தான் என்ன? எதுவுமே இல்லை.அதனால் தான் சொல்கிறோம் கோவை மக்கள் நரேந்திர மோடி அவர்களையே ஆதரிக்க வேண்டும்.
கோவை தொழிலாளர்களுக்காகவே மத்திய பாஜக அரசு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தியது.
சிறு,குறு நிறுவனங்களுக்கு, புதிய தொழில் தொடங்குபவர்களுக்காகவே “விஸ்வகர்மா யோஜனா” திட்டத்தை நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்தார்.அதற்காவே நாம் நரேந்திர மோடி அவர்களை ஆதரிக்க வேண்டும்.
பெண்களும் அரசியலில் ஈடுபட்டு பொதுசேவை புரிய வேண்டும்.பாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கென 33% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார் நரேந்திர மோடி அவர்கள்.அதற்காகவே  கோவை பெண்கள் நரேந்திர மோடிக்கு அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரை தர வேண்டும்.
“ஸ்டார்ட் ஆப்”  நிறுவனங்கள் தொடங்க இளைஞர்களையும்,இளம்பெண்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக “முத்ரா கடன்” உதவி திட்டம் போன்ற பல்வேறு தொழில் முதலீடுக்கான திட்டங்களை மானியத்தோடோ, குறைந்த வட்டியிலோ கொடுத்தவர்
நரேந்திர மோடி அவர்கள்.கோவை பகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக தொழில் தொடங்க, அதனை ஊக்கப்படுத்த நரேந்திர மோடி அவர்களின் பிரதிநிதி கோவை மக்களுக்கு வேண்டும்