, , ,

கோவை பன்னிமடை பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழப்பு

elephant death
Spread the love
கோவை துடியலூர் அருகே வரப்பாளையம்- பன்னிமடை பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடை- வரப்பாளையம் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைக் கூட்டத்தை வன பணியாளர்கள் மற்றும் இரவு ரோந்து குழுவினர் திருப்பி அனுப்பினர். அந்த யானை கூட்டத்தில் இருந்து தனிமையாக இருந்த குட்டி யானையை வனத்துறையினர் அந்த குட்டியை மீட்டு வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது அருகில் சுமார் 1 கி மீ தொலைவில் தனியார் நிலத்தில் பெண் யானை இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.
வனத்துறையினர் மீட்ட அந்த குட்டி யானை இறந்த பெண் யானை குட்டியின் தாயா அல்லது யானை கூட்டத்தை சேர்ந்ததா என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் வன பணியாளர்கள் மற்றும் வன கால்நடை அலுவலர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு ஆய்வு நடத்தி பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.