,

கோவை தொண்டாமுத்தூர் செங்கல் உற்பத்தியாளர்கள் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள்

michuang
Spread the love

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் செங்கல் உற்பத்தியாளர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அவர்களிடம் சென்னை வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவையில் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல், கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் தொண்டாமுத்தூர் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், 2,600 அரிசி மூட்டைகள், 2,200 போர்வைகள் ஆகியவை புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த பொருட்களை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அவர்களிடம் ஒப்படைத்தார்.

இதில், திமுக பகுதி செயலாளர் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் சிஎம்கே குமார், ரோட்டரி கிளப் ஆப் மில்லீனியம் தலைவர் டிகேடி யுவராஜ், திருமுருகன், சுரேந்திரன், பாஸ்கர், ஸ்ரீ ஹரி, மணிமொழி, சசிதரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.