,

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி டைலர் ராஜா கைது!

Spread the love

1998ம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி கோவையில் பாஜக தலைவர் அத்வானிக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது பயங்கரவாதிகள் 18 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்தி தாக்குதல் நடத்தினர். இது அத்வானிக்கு எதிரான கொலை முயற்சி எனக் கருதப்பட்டது. இந்த வழக்கில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்ட பலர் ஆயுள் தண்டனையுடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கியமான குற்றவாளியாக தேடப்பட்ட டைலர் ராஜா எனப்படும் சாதிக் ராஜா, கடந்த 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரை தற்போது பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர். அவரது பிடிப்பால் வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாநகர காவல் நிலையங்களுக்கு அனைத்து காவலர்களும் பணியில் இருக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையும் மிகுந்த விழிப்புடன் செயல்படுகிறது