, ,

கோவை தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நியமனம்

Kranti Kumar Pati
Spread the love

கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 2024 இல் லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், டிவி பேட் இயந்திரங்கள் தரவிறக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு சாவடிகள் அடையாளம் காணப்பட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் கோவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.