கோவை தார் சாலையில் விரிசல் – உடனடி பழுது அவசரம்!

Spread the love

கோவை மாநகராட்சியின் நல்லம்பாளையம் – மணிக்காரம்பாளையம் பகுதிகளில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தார் சாலையில் ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவில் பெரும் விரிசல் விழுந்து பள்ளம் உருவானது. மின்விளக்குகள் செயல்படாமல், இரவு நேரத்தில் அந்த வழியே சென்ற வாகனங்கள் குழியில் சிக்கி பிழிந்தன. இன்று காலை மாநகராட்சி குப்பை வாகனமும், சில இருசக்கர வாகனங்களும் அதே குழியில் சிக்கியுள்ளன.

போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து இருப்பதால், வாகன ஓட்டிகளின் நலனுக்காகவும் அப்பகுதி மக்களின் நலனுக்காகவும் உடனே கோவை மாநகராட்சி அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதியம் நேரத்தில் பள்ளி வாகனங்கள், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துவரும் வாகனங்கள் அதிகரிக்கும் என்பதால், இப்பகுதியில் துரித நடவடிக்கை அவசியம் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.