,

கோவை செங்கல் சூளையில் பிடிபட்ட 10 அடி மலை பாம்பு

python
Spread the love

கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் செங்கல் சூளைக்கு அருகே, பத்து அடி மதிக்கத்தக்க மலைப் பாம்பு ஒன்று வந்து இருக்கிறது. இதனை அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்தவுடன் பயந்து இருக்கின்றனர். பைத்தான் மலை பாம்பு அந்தப் பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சுருண்டு கொண்டது. உடனடியாக வனத்துறைக்கும், பாம்பு பிடி வீரருக்கும் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அலைபேசியில் தகவல் தந்தனர். இந்த நிலையிலே வனத்துறை வன பணியாளர்களும், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான விக்னேஷ் குமாரும் நஞ்சுண்டாபுரம் அங்கு சென்றனர். அப்பொழுது அங்கு இருந்த மலைப் பாம்புவை வனத் துறையுடன் இணைந்து, பாம்பு பிடி உபகரணங்கள் உதவியுடன், பாம்பு பிடி வீரர் விக்னேஷ் குமார் மீட்டு பைக்குள் அடைத்தார். அடைக்கப்பட்ட பாம்பு பின்னர் மாங்கரை வனப்பகுதியில் விடுவித்தனர்.