, , ,

கோவை சி.எஸ்.ஆர் மருத்துவமனை சார்பில் புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான்

csr hospital
Spread the love

தற்போது உலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோயாக புற்று நோய் உள்ளது. எனவே , புற்று நோய் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.எஸ் ஆர் மருத்துவமனை கோ ஸ்பான்சர் செய்துள்ள இந்த மாரத்தான் போட்டி வரும் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் இருந்து தொடங்குகிறது. மாரத்தான் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக சி.எஸ்.ஆர். மருத்துவமனை மருத்துவர். டாக்டர் சுராஜ் குமார் வீடியோ வெளியிட்டுள்ள புற்று நோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் மக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். அவர் வீடியோவில் கூறியிருப்பதாவது, புற்று நோய் விழிப்புணர்வுக்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. போட் டியில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகள் , குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். முறையாக அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள் ளது. எனவே, இந்த மாரத்தான் போட்டியில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.