கோவை சர்வதேச விமான நிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையம் விரிவாக்கம் செய்ய உள்ளது.விரிவாக்கத்திற்கு 627 ஏக்கர் நிலம் வழங்க ஆணையம் தரப்பில் கேட்டுக்கொண்ட நிலையில், தமிழக அரசு தரப்பில் 605 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆணையத்திடம் வழங்கப் பட்ட நிலத்தை சுற்றியும் மொத்தம் 16 கிலோமீட்டர் நீளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத் குமார் கூறுகையில், கோவை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் 75,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமைக்கப்படும். இப்போது உள்ள முனையக் கட்டிடம் 18,000 சதுர மீட்டர் இருக்கும் நிலையில் புது கட்டிடம் 4 மடங்கு பெரிதாக இருக்கும் என கோவை விமான நிலைய இயக்குனர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
புதிதாக அமையும் இந்த முனையத்தில் 14 விமானங்களை நிறுத்தலாம். இந்த விரிவாக்க பணிகளில் தமிழ்நாடு அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. விரிவாக்கப் பணிகளை 3 ஆண்டிகளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது கோவை விமான நிலைய ஓடுபாதை 2,900 மீட்டராக இருக்கிறது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு பின்பு 3,800 மீட்டராக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்படும். புதிய ஓடுபாதை வந்த பிறகுதான் பெரிய விமானங்கள் கோவைக்கு வந்து செல்ல முடியும். விமான நிலையத்தின் முன்பக்கம் சின்னியம்பாளையம்-கொச்சின் புறவழிச் சாலையில் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை சின்னியம்பாளையத்தில் அமையும் புதிய விமான முனையம்



Leave a Reply