சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
குழந்தைகள் கல்வியை இன்று துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளின் விரலைப் பிடித்து அரிசியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான “அ”, பிள்ளையார் சுழி, “அம்மா”, “அப்பா” போன்ற சொற்களை எழுத வைத்தனர். இதனை பெற்றோர்கள் உற்சாகத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
வித்யாரம்பம் நிகழ்ச்சியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Leave a Reply