,

கோவை கோட்டத்தில் 229 அரசு பேருந்துகள் புணரமைப்பு

bus
Spread the love

கோவை கோட்டத்திற்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள 229 அரசு பேருந்துகள் புணரமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட கோயம்புத்தூர், உதகை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு மண்டலங்களுக்கு நடப்பு ஆண்டில் 226 பேருந்துகள் புணரமைக்கப்படுவதற்கு தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி புனரமைக்கப்படுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்துகளில் முதற்கட்டமாக பணி முடித்த 4 பேருந்துகள் 08.12.2023 அன்றும் 11:122023 அன்று மேலும் 5 பேருந்துகளும் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. மீதமுள்ள பேருந்துகளின் கூண்டு கட்டுமான பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் மேலும் 36 பேருந்துகள் இந்த மாத இறுதிக்குள் பணி முடிக்கப்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.