கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று ஏ.டி.எம் களில் 65 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்றில் தப்பி சென்ற 7 பேரை, நாமக்கல் மாவட்டத்தில் தமிழக போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது லாரியில் இருந்தவர்கள் துப்பாக்கியை கொண்டு போலீசாரை சுட்டு தப்ப முயன்ற போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அசார் அலி என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே காயமடைந்த அசார் அலியை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு போலிசார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply