,

கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்

vanathi srinivasan
Spread the love

மத்திய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் நிர்வாகிக்கபடும் அரசுப் பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளி நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் குழந்தைகள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர்.

கோவை புலியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி முதல்வரிடம் அடிப்படை வசதிகள்,தேவைகள் குறித்து கேட்டறிந்தவர் தேவைப்படும் உதவிகளை அரசின் மூலம் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முன்னதாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மழை காலங்களில் பள்ளி முன்பும் மைதானத்தில் தேங்கும் நீரால் மாணவர்கள் அவதிப்படுவதாக தெரிவித்தனர்.மேலும் ஆசிரியர் பெற்றோர் கூட்டமைப்பை அமைக்க வேண்டும் புதர்கள் நிறைந்துள்ள பகுதிகளை சுத்தம் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.உரிய நடவடிக்கைகள் பள்ளி மூலம் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளபடும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *