கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக–திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம் — மேயர் மீது பிரபாகரன் முறைகேடு குற்றச்சாட்டு!

Spread the love

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் போது, அண்மையில் கோவை அவினாசி சாலையில் திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்திற்கு சிறப்பு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதன் போது அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், இந்த திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காரணமாக வரவேண்டியதாக வலியுறுத்தினார். இதனால் திமுக மாமன்ற உறுப்பினர்களுடன் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பரபரப்பான சூழல் உருவானது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வாழ்க என சபாச்சொல்லி, பிரபாகரன் மற்றும் ரமேஷ் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன், “மேயர் பல்வேறு கட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். 103 தீர்மானங்களில் 55 தீர்மானங்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதில் கையூட்டு ஏற்பட்டிருக்கக் கூடும். இதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று குற்றச்சாட்டு முன்வைத்தார்.