கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பாக புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ். விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. பேரவை மாவட்ட இணை செயலாளர்கள் ஸ்ரீதர் மற்றும் டி. எல். சிங் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி அவர்களின் தீவிர முயற்சியால் 2020ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் தொடங்கப்பட்ட அவினாசி மேம்பாலம் தற்போது 50 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
இந்த மேம்பாலம் தென்னிந்தியாவில் மிக நீளமானது எனும் பெருமை பெறுகிறது. இதற்காக வருங்கால முதல்வர் எடப்பாடியாருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், “புரட்சி தமிழர் எழுச்சி பயணம் வெற்றி பெற்று வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க அம்மா பேரவை அயராது பணியாற்றும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் மாபெரும் திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோக நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இதில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும், செயலாளர்களுக்கும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை நன்றி தெரிவித்தது.
அதேவேளை, திமுக அரசு பொறுப்பேற்ற போது வழங்கிய 520 வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகக் கூறி, கடுமையான கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் லட்சுமணன், சிவன்மலை, அர்ஜுனன், வெற்றிவேல், நகர் பாலு, செல்வகுமார், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், செந்தில்குமார், குமரேசன், ராம்குமார், சின்ராஜ், கார்த்தி, நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Leave a Reply