கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு, அவிநாசி சாலை மேம்பாலத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் நிலையை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த கோரிக்கை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல் காலாண்டு கூட்டத்தில் வலியுறுத்தினார். கூட்டம் துணை ஆணையர் திவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது.
நா. லோகு தெரிவித்தார், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வரை அமைக்கப்பட்ட உயர் மட்ட மேம்பாலத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இருசக்கர, நான்குசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்லும் போது பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் பாலத்தின் கீழும் மேற்புறமும் AI தொழில் நுட்ப வசதிகள் கொண்ட கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டியதுடன், அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
மேலும் கோவை மாநகரில் பல முக்கிய சாலைகள், பெரிய கடை வீதி, தண்ணீர் பந்தல், சித்ரா காளப்பட்டி சாலை, டாடாபாத், சாய்பாபா காலனி போன்ற இடங்களில் சாலையில் தள்ளுவண்டி கடைகள் அதிகரித்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்காக போக்குவரத்து சமிக்கை விளக்குகள், எச்சரிக்கை பலகைகள், ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடங்கள் மாற்றம், புதிய காவல் நிலையம் அமைக்கல் போன்ற நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நுகர்வோர் அமைப்புகள் வழங்கிய மனுக்களுக்கு ஆணையர் அலுவலகத்தில் ஒப்புகை சீட்டு வழங்கப்படும் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது



Leave a Reply