கோவை மாவட்டம் மதுக்கரை அருகே வீரப்பனூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமார் (வயது 35), செப்டம்பர் 4-ஆம் தேதி அதிகாலை வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
காவல் துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், குமாரின் பின் தலையில் கடுமையான காயம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது தாய் பூவாத்தாள் அளித்த தகவலின் பேரில், குமாரின் நண்பர் எட்டிமடையைச் சேர்ந்த ஆனந்தகுமார் மீது போலீசார் சந்தேகத்தைத் திருப்பினர்.
விசாரணையில், சம்பவத்தன்று இருவரும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகவும், அதில் ஆனந்தகுமார் குமாரை தள்ளியதாகவும் தெரியவந்தது. தள்ளப்பட்ட குமார் தரையில் விழுந்து அப்போது மயங்கிய நிலையில் இருந்தார். அவர் எழாமல் கிடந்ததை, போதையிலிருந்தார் என நினைத்து ஆனந்தகுமார் அங்கிருந்து சென்றதாக கூறியுள்ளார்.
காலை எழுந்தபோது, குமார் உயிரிழந்தது வெளிப்பட்டது. தள்ளியதில் ஏற்பட்ட காயத்தால் குமார் இறந்தது உறுதியாகியதால், போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.



Leave a Reply