பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்ற யுஜிசி யின் புதிய வழிகாட்டுதலை கண்டித்தும் துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிக்கும் யுஜிசியின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் யுஜிசி நகல் எரித்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகமது ஜில்பிகர் தலைமை தாங்கினார். போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் தினேஷ் ராஜா உரையாற்றினார்.
கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் யுஜிசி நகல் எரித்து போராட்டம்

Leave a Reply