கோவை அன்னபூரணி அம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவால் ரூ.55 கோடி மதிப்பு நிலம் மீட்பு

Spread the love

கோவையில் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலின் உப கோவிலான அன்னபூரணி அம்மன் கோவிலுக்கு சொந்தமான மாதம்பட்டி பகுதியில் உள்ள 11 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகத்தினர் 2008 ஆம் ஆண்டில் கோவை குற்றவியல் இரண்டாவது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கினர்.

இந்த வழக்கில், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில், ஆக்கிரமிப்பு நீக்க நடவடிக்கை 30 ஜூலை 2025 அன்று தொடங்கப்பட்டது.

ரூ.55 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை மீட்கும் பணியில், காவல் துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பல ஆண்டுகளாக இந்த நிலத்தில் சிலர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நில மீட்பு நடவடிக்கை கோவில் வளத்தின் பாதுகாப்பிலும், பக்தர்களின் நம்பிக்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.