கோவை மாவட்டத்தில் காவல் துறையின் சேவையை மேலும் சீர்படுத்தும் வகையில் “SMART KHAKKI’S” என்ற புதிய திட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், காவலர்களுக்கு 33 புதிய இருசக்கர வாகனங்கள், கை ரேகை கருவி, பாடி கேமரா, DD மெஷின், அதிநவீன வாக்கி டாக்கி, E-Challan மெஷின் உள்ளிட்ட பல உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த கருவிகள் மூலம் குற்றவாளிகளின் புகைப்படங்களை பதிவு செய்து அவர்களின் விவரங்களை உடனடியாக கண்டறியும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் கொடி அசைத்து இந்த ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார். மேலும், இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும் என்றும், அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை கூட பெட்ரோல் பணியில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் பள்ளி, கல்லூரி போன்ற பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமையப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 2–3 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், சூலூரில் கத்தியால் போலீசாரை குத்திய மர்ம நபர் மற்றும் அவரது மனைவியிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில் விரைவில் கைது நடக்கும் என்றும், 235 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை மாணவர்களிடம் நேரடியாக மேற்கொண்டு வருகிறோம் எனவும் எஸ்.பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



Leave a Reply