கோவை மாநகராட்சி 20-வது வார்டு, பாரதி நகர் பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் பகிர்மான குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாநகர மாவட்ட கழக செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ச்சுணன் அவர்கள், இன்று நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இந்தப் பணிகள் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின் பேரில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.
நிகழ்ச்சியில் மனியகாரம்பாளையம் பகுதிகழக செயலாளர் நடராஜன், வார்டு செயலாளர்கள் நாகராஜ், சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
பணிகள் துவக்கத்தை ஒட்டி இனிப்புகள் வழங்கப்பட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.



Leave a Reply