,

கோவையில் வேட்புமனு தாக்கல் செய்தார் அண்ணாமலை

annamalai
Spread the love
மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுமக்களின் பேராதரவு மற்றும் அன்போடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு கொடுத்துள்ளோம். பிரதமர் மோடி 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அதில் கோயம்புத்தூர் மக்களின் குரலாக பாஜகவின் குரல் இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்.

அதிமுக வேட்பாளர் தந்தை குறித்த கருத்துக்கு மன்னிப்பு கூற முடியாது. அது என்னுடைய கருத்து. வேட்பாளரோடு எனது போட்டியல்ல  தமிழகத்தின் வளர்ச்சியை கெடுக்கும் ஆதிக்க சக்தியோடு தான் எங்களது போட்டி.  கோவையின் ஜவுளித்துறை மற்றும் தொழில் துறையினரின் குரலாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எத்தனை முறை பேசியுள்ளார் என்பதை பார்க்க வேண்டும். ஆனால் நாங்கள் கட்சி ரீதியாக கோவையின் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக முயற்சிகளை முன்னெடுத்து சலுகைகளை பெற்றுத் தந்துள்ளோம். குறிப்பாக விமான நிலைய விரிவாக்கம் குறித்து மத்திய அமைச்சர் முதலமைச்சருக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார்.

கடைசியாக உள்ள 87 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் தாமதப்படுத்தி வருகின்றனர். சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் மூன்று முறை விமான நிலைய விரிவாக்கம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் முயற்சியில் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கோயம்புத்தூருக்கு வந்து தொழில்துறையினரின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளர்.