கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் தாக்கத்தால், சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, குளங்கள் மற்றும் தடுப்பணைகளில் நீர்வரத்து அதிகரித்து, கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் உயர்ந்ததால் தடுப்பணை திறக்கப்பட்டு, வெள்ளநீர் வேகமாக கரைபுரண்டு ஓடி வருகிறது.
இந்நிலையில், ஆபத்தை உணராமல் சில இளைஞர்கள் வெள்ளப்பெருக்கு நீரில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் கவலைக்கிடம் அளிக்கிறது. இதனால், அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மழையால் நொய்யல் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து, சித்திரைச்சாவடி மற்றும் நண்டங்களை தடுப்பணைகளிலும் தண்ணீர் அதிக அளவில் சேர்ந்து வருகிறது.
வனத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



Leave a Reply