கோவையில் வகுப்பறையில் பெண் மாணவி கத்திக்குத்து – மாணவன் கைது

murder
Spread the love
சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வகுப்பறையில் மாணவி ஒருவர் சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் (18) மற்றும் அவருடன் படிக்கும் 17 வயது மாணவி இருவரும் அதே கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வருவோர் என தெரியவந்துள்ளது. காதல் தொடர்பில் ஏற்பட்ட தகராறின் பின்னர், ஹர்ஷவர்தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த கத்தியால் மாணவியை வகுப்பறையிலேயே குத்தியதாக கூறப்படுகிறது. இதில் மாணவியின் கை மற்றும் முதுகுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மாணவர்கள் மீட்ட மாணவி, கல்லூரி குழும மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், இருவருக்கும் காதல் தொடர்பு இருந்து, மாணவி நண்பர்களுடன் பேசுவதை மாணவன் எதிர்த்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு ஹர்ஷவர்தனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.