மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டமான ரோஜ்கார் மேளா நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. 40 இடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 51,000-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசு துறைகளில் பணிக்கு நியமனம் செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியில் இணைந்து சிறப்புரை ஆற்றினார்.
இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக் பங்கேற்று 51 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தபால் துறை, வங்கி, ரயில்வே, உள்துறை ஆகிய மத்திய அரசு துறைகளில் பணியிடங்களைப் பெற்ற இளைஞர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனும் கலந்து கொண்டார். பேசிய அவர்:
“மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அதிகாரிகளின் பொறுப்பு—சீரிய பணிபுரிய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக் தனது உரையில்:
“விக்சித் பாரத் நோக்கில் இளைஞர்களே நம்பிக்கையின் தூண்கள். அதற்காகவே ரோஜ்கார் மேளா மிகப் பெரும் பங்கு வகிக்கிறது” என்றார்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் “தாயின் பெயரில் மரக்கன்று நடுதல்” என்ற முன்னெடுத்துக்காட்டில் மரக்கன்றுகள் நட்டனர். பணி நியமனம் பெற்ற இளைஞர்கள் செல்ஃபி பாயிண்ட்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர்:
“கடந்த 3 ஆண்டுகளில் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் வளர்ச்சி பயணத்தின் அஸ்திவாரம்” என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய வானதி சீனிவாசன்:
“டெல்டா விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உரிய நெல் கொள்முதல் நடைபெறவில்லை. தமிழக அரசு உடனடியாக இழப்பீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.





Leave a Reply