கோவை காந்திபுரம் பகுதியில் ரூபாய் 208.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட செம்மொழி பூங்காவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
2010 ஆம் ஆண்டு உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் போது அப்போதைய முதல்வர் கருணாநிதி 165 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் 2011-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திட்டம் நிறுத்தப்பட்டது. திமுக 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி மதிப்பில் பூங்கா பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. 2023-ல் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய இந்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இன்று கோவை விமான நிலையத்தில் வந்த முதலமைச்சரை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, கே.எம்.நேரு, டி.ஆர்.பி.ராஜா, சாமிநாதன், எம்.பி. கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் காந்திபுரம் சென்ற முதலமைச்சர் செம்மொழி பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.



Leave a Reply