, , ,

கோவையில் மோடி ரேக்ளா ரேஸ் – பரிசளித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

annamalai
Spread the love

கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்த ராஜன் தலைமையில் L&T பைபாஸ் வெள்ளலூர் கள்ளப்பாளையம் பிரிவு அருகே மாபெரும் மோடி ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர்.


போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனமும்,மூன்றாம் பரிசாக தங்க நாணயங்கள் மற்றும் ஆறுதல் பரிசாக வெள்ளி நாணயங்கள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார். அண்ணாமலை ரேகளா வண்டி மூலம் ரேஸ் நடக்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு கோவை பாஜகவினர் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில முதல் செயலாளர் ஏ பி முருகானந்தம் மற்றும் கே பி ராமலிங்கம் கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மருதாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ரேக்ளா ரேஸ் பற்றி மக்களுக்கு பிரபலம் படுத்த வேண்டும் என்று மோடி ரேக்ளா ரேஸ் திருவிழா நடைபெற்றது.மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பொய்களை பேசி மக்களை ஏமாற்றி வருகிறார்.
2006-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ் மதுரை நீதிமன்றத்தில் தடை செய்தார்கள்.காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு தடை செய்தனர்.
காளைகளை காட்சி படுத்த கூடாது என்று காங்கிரஸ் ஆட்சியில் 12 திமுக அமைச்சர்கள் இருந்த போது ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ்,ஏறு தழுவுதல் போட்டிகளை தடை செய்தார்கள்.
மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்த போது காளையை தடை செய்யபட்ட பட்டியலில் இருந்து காளை நீக்கினார்கள்.அதன் பிறகு பீட்ட அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அதனை வென்று தற்போது ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ் போன்ற போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா கூட்டணியில் முரண்பாடு இல்லாத கூட்டணி என்றும் கூட்டணியில் இருப்பவர்களிடம் ஒற்றுமை இல்லை என்று கூறினார்.மோடி 2024 ஆட்சிக்கு வருவது உறுதி என்றும் முரண்பாடு இருப்பதால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை.” என்றார்