கோவையில் மொரீஷியஸ் இந்திய வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் மொரீஷியஸ் கௌரவ இந்திய வர்த்தக ஆணையளுரும்;, நேரு கல்வி குழுமங்களின் தலைவருமான வழக்கறிஞர் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ், இந்தியாவுக்கான மொரீஷியஸ் முன்னாள் அமைச்சரும் உயர் ஆணையருமான முகேஸ்வர் சூனி மற்றும் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய மொரிஷியஸ் வணிக கருத்தரங்கை, இந்திய மொரிஷியஸ் வணிக கமிஷனர் மற்றும் தமிழ்நாடு கேரளா நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலரான பி.கிருஷ்ணதாஸ் ஏற்பாடு செய்திருந்தார். இந்தியா
வுக்கான மொரிஷியஸ் தூதுவரும் முன்னாள் அமைச்சரும், கோபியோ (இந்திய வம்சாவளி மக்களுக்கான உலக ஒருங்கிணைப்பாளருமான மூக்கிஸ்வுர் சூனே பங்கேற்றனர். கௌரவ விருந்தினராக இந்திய பொருளாதார வணிக நிறுவனத்தின் (ஐஇடிஓ) தலைவரும், மொரிஷியஸ் வர்த்தகம் மற்றும் வணிக துறை அமைச்சர் ஆசிப் இக்பால் பங்கேற்றார். இந்திய பொருளாதார வர்த்தக நிறுவனத்தின் தலைவர், வணிக கமிஷனர், இயக்குனர்கள், இந்திய, மொரிஷியஸ் அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த தொழில் அமைப்புகள், நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், பவுண்டரி சங்கங்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்றன. இருதரப்பினருக்கும் இடையே ஈடுஇணையற்ற வணிக வாய்ப்புகளை பற்றி ஆராயவும், புதிய முதலீட்டுக்கான வாய்ப்
பாகவும் இது அமைந்தது. இருநாடுகளுக்கும் இடையே முடிவுகளை மேற்கொள்ளும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply