,

கோவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

ஜெயலலிதா
Spread the love
கோவையில். அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட அதிமுகவினர் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம் எல் ஏ தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி ஜெயலலிதாவின்உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது கேக் வெட்டி வழங்கப்பட்டது.கோவை மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் கல்வி உதவித்தொகை, நிதி உதவி, மருத்துவ உதவி ஆகியவை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே .ஆர். ஜெயராம், புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ துரைமுருகன் அவைத்தலைவர் சிங்கை முத்து, பேரவைச் செயலாளர் கவுன்சிலர் பிரபாகரன், சி. டி. சி. ஜப்பார்,  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.