, , ,

கோவையில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

atal bihari vajpayee
Spread the love

பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டம் செல்வபுரம் மண்டல் சார்பாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கார்த்திக் ஏற்பாட்டில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின்  நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு  கோவை தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் மற்றும்  ஊடக பிரிவு  மாநிலச் செயலாளர் பி.பிரேம் குமார் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்தார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வி.குமார், ஆர்.பானு, மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர்  ஏ.நாச்சிமுத்து, வி.வித்யா சங்கர் மாவட்டத் தலைவர் விருந்தோம்பல் பிரிவு , சி.டி.மணிகண்டன் மாவட்டச் செயலாளர் கலை மற்றும் கலாச்சார பிரிவு, ஜெகன் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர், சிதம்பரம் மண்டல் தலைவர் ஏ.ராஜா, மண்டல் பொதுச்செயலாளர் என்.கணேசன், மண்டல துணை தலைவர் பி. பாலமுருகன்,  மண்டல் செயலாளர் ஆர்.ஜீவ கணேஷ்,  78 வது வார்டு பொறுப்பாளர் யு.நந்தகுமார், கோவை சுந்தர், ஏ.கார்த்தி பிரச்சார பிரிவு மண்டல துணைத் தலைவர் மற்றும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்