கோவை கருமத்தம்பட்டி அருகே சட்ட விரோதமாக திமிங்கலத்தின் வாந்தி அம்பர்கிரிஸ் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கோவை வனத்துறையினர் மற்றும் திருப்பூர் வனத்துறையினர் வாகராயன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் என்பவரது வீட்டில் சோதனையிட்டனர். அப்போது திமிங்கலத்தின் வாந்தியை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சுமார் 6 லட்சம் மதிப்புடைய 3 கிலோ வாந்தியை பறிமுதல் செய்து இளங்கோவனை கைது செய்தனர். தொடர்ந்து கோவை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த வனத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலத்தில் வேறு ஒரு நபரிடம் இதை வாங்கி விற்பனை செய்ய வைத்திருந்ததும் ஏற்கனவே இதனை சென்னையில் விற்க முயன்ற நிலையில் அங்கு விற்பனை செய்ய முடியாததால் இடைத்தரகர்கள் மூலம் கோவையில் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் திமிங்கலத்தின் வாந்தி ஒரு வித ரசாயனத்தை கொண்டதாகும் இதனை வெளிநாடுகளில் வாசனை திரவியத்திற்கு பயன்படுத்துவது தெரிய வந்ததுள்ளது. மேலும் இவை லட்சக்கணக்கான மதிப்புடையவை என்பதால் இதனை பலர் விற்பனை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் திமிங்கலத்தின் வாந்தியை போன்று செயற்கையாக உருவாக்கி போலியாக விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே யானை தந்தம் கடத்திய வழக்கில் கேரள வனத்துறையினர் இளங்கோவனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply