கோவை: கோவை கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த ஜோதி (43) பொது கழிவறைக்கு சென்றபோது தண்ணீர் இல்லை என்பதால், அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் பொதுமக்கள் தேடினார்கள்.
தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, ஜோதி அதற்குள் விழுந்து உயிரிழந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். பொது இடங்கள், குறிப்பாக கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லாததும், தண்ணீர் தொட்டிகளுக்கு பாதுகாப்பான மூடிகள் இல்லாததும் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்ததா என்பதையும் விசாரிக்கின்றனர்.



Leave a Reply