கோவை மாநகர மாவட்ட பா.ஜ.க சார்பில் வடவள்ளி பகுதியில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வடவள்ளி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் 120 பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வள்ளிக் – கும்மி, சிலம்பம், பரதம், ஜமாப் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் நபின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply