பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவப் பொம்மையை எரித்த முற்போக்கு இயக்கத்தினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவினாசி சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பீகார் மற்றும் ஒடிசா தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர்களை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் “தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பி போ” என கோஷமிட்டனர். பின்னர் சாலை மறியல் நடத்தி, மோடியின் உருவப் பொம்மைக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தலையீடு செய்த போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.



Leave a Reply