கோவை வ.உ.சி. மைதானத்தில் வரும் செப்டம்பர் 17, 2025 முதல் அக்டோபர் 26, 2025 வரை மக்களை மகிழ்விக்கும் வகையில் பெரும் பொருட்காட்சி நடைபெற உள்ளது.
இந்தக் கண்காட்சியில், நயாகரா நீர்வீழ்ச்சி, ஸ்னோ லேண்ட், கடல் தேவதைகளின் சாகசம் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழ்ந்து விளையாட பலவகைச் சுழற்சி வண்டிகள், மூவடி திகிலூட்டும் பேய்மனை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளன.
மேலும், டெல்லி அப்பளம், பானி பூரி, சோலா பூரி, ஐஸ்கிரீம், குளிர்பானம், மதுரை ஜிகர்தண்டா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சுவையான உணவுவகைகள் மக்கள் ரசிக்க ஏற்பாடாகியுள்ளன.
பொதுமக்கள் வணிகம் செய்ய அறுபதுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சுட்டிக்குழந்தைகளுக்கென பந்தாட்டம், படகு சவாரி போன்ற விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.
கோவை மக்களுக்கு விருந்தாக நடைபெறும் இப்பொருட்காட்சி மாலை மூன்று மணி முதல் இரவு பத்து மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.
கோவை வாழ் மக்களே, குடும்பத்துடன் கலந்து கண்டு மகிழ வாரீர்!
கோவையில் நயாகரா நீர்வீழ்ச்சி, ஸ்னோ லேண்ட், கடல் தேவதைகளின்– பிரம்மாண்ட பொருட்காட்சி



Leave a Reply