2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை மக்கள் தேவை குறித்து கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினர்.
இந்த குழுவில் திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்துப் பாதுகாப்புக்குழு செயலாளர், . அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவை.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன்,அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில் துறையினர், கல்வியாளர்கள், சிறு,குறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள்,தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோவை மக்கள் தேவை குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
Leave a Reply