, ,

கோவையில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

udhayanidhi stalin
Spread the love

கோவை கொடிசியா மைதானத்தில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணி சார்பில், திமுக  இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில், அமைச்சர் முத்துச்சாமி, திமுக துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா , மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், இளைஞரணி அமைப்பாளர்கள் தனபால், சபரி கார்த்திகேயன், ஹக்கீம் மற்றும் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பிரகாஷ், மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை செல்வராஜ், பனப்பட்டி தினகரன், முன்னாள் எம்பி ஏபி நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
இந்த நிகழ்ச்சியில்   ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணி சார்பில்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசளிக்கப்பட்டது