ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் என்பவர் கோவை தெப்பக்குளம் மைதானம் தியாகராய வீதியில் வசித்து வருகிறார். இவர் சவுடம்மன் கோவில் தெரு ராஜா வீதியில் உள்ள இவரது உறவினரின் வாட்ச் கடைக்கு தனது மூன்று வயது குழந்தை இமன்ஷு-ஐ அழைத்துச் சென்றார். குழந்தை அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கு வைத்திருந்த வைட் பெட்ரோலை தண்ணீர் என நினைத்துக் குடித்து விட்டது.
இதை அறிந்த தினேஷ்குமார் பதட்டம் அடைந்து அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார் பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தினேஷ் குமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்
Leave a Reply