தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பில், கோவையில் நடைபெற்ற விழாவில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘தகவல் அறியும் விழிப்புணர்வு கையேடு’ வெளியிடப்பட்டது.
இந்த விழாவில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையர் பிரியகுமார் அவர்கள் இந்த விழிப்புணர்வு கையேட்டை வெளியீடு செய்தார்.
இதில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி, தேசிய செயல் செயலாளர் லயன் செந்தில்குமார், மற்றும் எழுத்தாளர் ‘கனலி’ எனப்படும் சுப்பு ஆகியோர் பங்கேற்று, தகவல் கையேட்டைப் பெற்றுக் கொண்டனர்.
விழாவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முக்கியத்துவம், அதன் பயன்பாடு மற்றும் பொதுமக்கள் இதனை எவ்வாறு பயனுள்ளதாகக் கையாளலாம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு கையேடு, தகவல் அறியும் உரிமையை புரிந்துகொள்ளும் ஒரு எளிய வழிகாட்டியாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Reply