,

கோவையில் ஜூலை 5-ல் போக்குவரத்து மாற்றம்

Spread the love

கோவையில் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும் இஸ்கான் தேர்திருவிழா காரணமாக, மாநகரில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 12 மணி முதல் மாலை 6 மணி வரை உக்கடம், பேரூர் ரோடு, ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை மற்றும் பிற பகுதிகளில் மாற்றுப் பாதைகள் செயல்படும். கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகரில் வர தடை செய்யப்படும்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றப்பட்ட வழிகளை பின்பற்றவும், காவல் துறையின் அறிவிப்புக்கு இணங்க ஒத்துழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *