, ,

கோவையில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை சட்டசபையில் அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ கோரிக்கை

amman arjunan
Spread the love

ஜி.டி. நாயுடுவுக்கு சிலை அமைக்க வேண்டுமென்று சட்டசபையில் அம்மன் கே.அர்ஜுனன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சட்டசபையில் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் பேசியதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதையை முதல்வர் ஜெயலலிதாவால் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இளந்தலைமுறையினரை எழுத்தாளர்களாக, பேச்சாளர்க ளாக, கவிஞர்களாக மாற்றவே இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இதனால், கேவை வடக்கு தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி திட்டம் தொடங்க வேண்டும். இதனால், கோவை வடக்கு தொகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயிற்சி பெறுவார்கள். இதனால், அவர்களின் எழுத்தாற்றல், பேச்சாற்றல், கவிதை புனையும் ஆற்றல் பெருகி உலகமெங்கும் புகழ் பெறுவார்கள்.
மேலும், மறைந்த தொழில்மேதை ஜி.டி.நாயுடுவுக்கு கோவையில் சிலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.