மகளிர் இலவசமாக பயணிக்க கூடிய வகையில் தமிழகத்தில் 422 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும், மகளிருக்கான இலவச பஸ்களை அடையாளம் காணும் வகையில் முன், பின் பகுதிகளில் பிங்க் நிறத்தில் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தற்போது மாநகரில் மகளிருக்கு கட்டணமின்றி வெளிர் நீல நிறத்தில் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதில் ஜிபிஎஸ், பேருந்து நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட நவீன வசதிகள், கூடுதல் இடவசதியுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதன்படி முதற்கட்டமாக கோவைக்கு வெளிர் நீல நிறத்தில் 16 டவுன் பஸ்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 6 பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன.
Leave a Reply