கோவை வேலந்தாவளம் சாலையில் உள்ள வீரப்பனூரில் புதிய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் எஜுகேஷன் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் ரிப்பன் வெட்டி கல்லூரியை திறந்து வைத்தார். இதனையடுத்து, கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கல்லூரியின் கல்வெட்டை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் பிரதீப் ஜோஸ், கல்லூரி தாளாளர் மனோகரன், கல்லூரி முதன்மை செயல் அதிகாரி மதிவாணன், கல்லூரி முதல்வர் அன்னம் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடராஜ் மருத்துவமனை தாளாளர் நடராஜன், கொங்குநாடு மருத்துவமனை தாளாளர் டாக்டர் ராஜு, தன்வந்திரி தாளாளர் கணபதி, சாய் கல்லூரி செயலாளர்கள் ராஜி சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவையில் சாய் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் எஜுகேஷன் கல்லூரியை திறந்து வைத்த தொல் திருமாவளவன்

Leave a Reply