கோவை டவுன்ஹால் அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கத்திபோடும் திருவிழா பக்தர்களின் உற்சாகக் கலந்த பங்கேற்புடன் நடைபெற்றது.
பூமார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம், இசை முழக்கத்துடன் ஆடிப்பாடி சவுடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி வந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் “வேசுக்கோ, தீசுக்கோ” என பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும், கத்தியை கைகளில் வெட்டிக் கொண்டு தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
வெட்டுக் காயங்களால் உடலில் ரத்தம் வழிந்தபோதிலும், அந்த காயங்களின் மீது திருமஞ்சனப் பொடி பூசி, பக்தர்கள் ஆடிக் கொண்டே ஊர்வலத்தில் தொடர்ந்து பங்கேற்றனர். மூன்று நாட்களில் காயம் ஆறிவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
பின்னர், ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நிறைவடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அம்மன் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெற்றது.



Leave a Reply