கோவை மாநகரில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக, காவல் துறையினர் பேருந்து பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் தலைமையில், காட்டூர் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட போலீசார், காந்திபுரம் பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களில் தீவிர சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் பேருந்து பயணிகள், பேருந்து நிலையங்களிலுள்ள கடைகள் மற்றும் பேருந்துகளுக்குள் சென்று குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் முழுமையாக சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் போதை பொருள் ஆசாமிகள், பிக்பாக்கெட் (பை சோரிகள்), மிரட்டல் விடும் நபர்கள் உள்ளிட்டவர்களை கட்டுப்படுத்தும் வகையில், இந்த அதிரடி சோதனை தொடரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply