கோவையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் – அதிர்ச்சி சம்பவம்

Spread the love

மதுரையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி கல்வி கற்கிறார். விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், அவர் தனது நண்பர் வினித்துடன் காரில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மூவர், வினித்தை அரிவாளால் தாக்கி, மாணவியை வலுக்கட்டாயமாக காரிலிருந்து இழுத்துச் சென்றனர். தாக்குதலில் படுகாயமடைந்த வினித் மயக்கமடைந்தார். சில நேரம் கழித்து மயக்கம் தெளிந்ததும் மாணவி காணாமற்போனதை அறிந்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அருகிலுள்ள பகுதியில் மாணவியை நிர்வாணமாக கிடந்த நிலையில் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூன்று இளைஞர்கள் இணைந்து மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூரச் சம்பவம் கோவை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.