கீதம் இசை குழு இன்னிசை நிகழ்ச்சி கோவை கீதம் இசை குழுவின் ஆறாவது நிகழ்ச்சி பீளமேட்டில் உள்ள எஸ்எம்எஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
காலையில் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் இசைக்குழு நிர்வாகி நா. லோகு வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இதில் சென்னை உடுமலைப்பேட்டை பல்லடம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண் மற்றும் பெண் பாடகர்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த பழைய பாடல்களை பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். குறிப்பாக திருப்பூர் சேர்ந்த ராம்கி விண்ணோடும் முகிலோடும் என்ற பாடலும் அன்னூரை சேர்ந்த ஆனந்த ஜோதி காவியமா நெஞ்சில் ஓவியமா என்ற பாடலும் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜநாயர் தஞ்சாவூர் ஜில்லா என்ற பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
இசை குழு நிர்வாகி லோகு காத்திருக்கேன் கதவை திறந்து உள்ளுக்கு வாடி என்ற ரஜினி பாடலை பாடி அசத்தினார். மாலை வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட பாடகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் அசைவ விருந்து வழங்கப்பட்டது. மாலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இசை குழு நிர்வாகி நா லோகு தாமரை செல்வி சிவசங்கர் பாலாஜி சிவராமன் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியின் பாடல்களை பூபதி கிருஷ்ணமூர்த்தி சுனேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Leave a Reply