கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அக்கட்சி சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில் “தமிழக மக்களின் அடிமட்ட சாமான்யனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க… நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம்! என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல் மீண்டும் கோவையில் போட்டியிடுவது உறுதி செய்வதைப் போல, கோவை மாநகரின் முக்கிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.
Leave a Reply