கோவையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா

Spread the love

கோவையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதோடு, அவரின் தியாகங்களையும் சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூரும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு நடைபெற்ற 154ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், கோவை வ.உ.சி. மைதானத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல், கோவை மத்திய சிறைச்சாலை முகப்பில் வ.உ.சி. இழுத்துச் சென்ற செக்கின் அருகிலும்கூட, அவரது திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.