கோவை மாவட்ட காவல்துறையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் போதை சாக்லேட்டுகள், கஞ்சா, போதை வஸ்துக்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல், போதை வஸ்த்துக்கள், செல்போன்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையில் பறிமுதல் செய்யபட்ட அனைத்தும் செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து , செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, ” கோவை மாவட்டத்தில் காவல்துறையினர் தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் . பேரூர் கருமத்தம்பட்டி செட்டிபாளையம் மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 இடங்களில் ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு டிஎஸ்பி ஒன்பது இன்ஸ்பெக்டர் 300 காவலர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது, 22 ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது .
மேலும் 4.5 கிலோ கஞ்சா 50 மில்லி கிராம் கஞ்சா ஆயில் சிந்தடிக் ட்ரக்ஸ் மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 18 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். வெளி மாவட்டத்திலிருந்து தங்குவதற்கு மாணவர்கள் யாரேனும் வந்தால் வீட்டின் உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . கோவை மாவட்டத்திற்கு பெரும்பாலும் வெளியில் குற்றம் செய்துவிட்டு இங்கு தங்குகிறார்கள். எனவே வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாடகை விடுவதற்கு முன்பு அவர்களை நன்கு விசாரிக்க வேண்டும். சந்தேகப்படும்படியாக இருந்தால் உடனடியாக காவல்துறையில் தெரிவிக்க வேண்டும்” என்றார்.



Leave a Reply